உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள்

திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள்

திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு அதிகாலையில் எண்ணெய் காப்பு சாத்துப்படியாகி, பூஜை முடிந்தவுடன் தீபாவளி பூஜை, தீபாராதனை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பணசாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் புத்தாண்டுகள் அணிவிக்கப்பட்டு, பூஜை நடந்தது. மீனாட்சி அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியானது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !