பரமக்குடியில் ஊஞ்சல் சேவையில் கவுரி அம்மன்
ADDED :1154 days ago
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில், நோன்பு விழாவில் ஊஞ்சல் சேவையில் அம்மன் அருள் பாலித்தார்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நாள் தொடங்கி, கவுரி விரதம் மற்றும் கவுரி நோன்பு விழா நடக்கிறது. இதன் படி அக்., 24 இல் துவங்கிய விழாவில் தினமும் அம்மன் பல்வேறு அவதாரங்களில் அருள் பாலித்தார். நேற்று இரவு அம்மன் நான்கு கரங்களுடன் சரஸ்வதி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தார். நேற்று காலை உற்சவ சாந்தி, பாலாபிஷேகம் நிறைவடைந்து, அம்மன் சயன கோலத்தில் வீதி வலம் வந்தார்.