உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

மூலநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதியில் சஷ்டி உற்ஸவம் அக்.,25ல் துவங்கியது. அக்.,30ல் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி சூரசம்ஹாரம் நடந்தது நேற்று காலை 10:00 மணிக்கு பாவாடை தரிசனம், மாலை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், கிராம மக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !