பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1397 days ago
செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் 13 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றம், இரண்டாம் நாள் தந்தைக்கு உபதேசம், மூன்றாம் நாள் தாருகன் வதம், நான்காம் நாள் சிங்கமுகன் வதம், ஐந்தாம் நாள் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 30ம் தேதி ஆறாவது நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து 31ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியகரம் பொதுமக்கள் செய்தனர்.