உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தின் போது, தேர் மேலே சென்ற மின்சார வயரில் உரசியதால் தேரின் உச்சியில் இருந்த குடை சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும், உடனடியாக குடை சரி செய்யப்பட்டு தேரோட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.


சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் யோக நரசிம்மருக்கு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு நரசிம்ம பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தின​மும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் நரசிம்ம பெருமாள் வீதி உலா நடைபெற்று வந்தது. பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் இன்று ஜூலை 1ம் தேதி நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருளினார், பக்தர்கள் வடம்பிடிக்க, காலை 7 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தின் போது, தேர் மேலே சென்ற மின்சார வயரில் உரசியதால் தேரின் உச்சியில் இருந்த குடை சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும், உடனடியாக குடை சரி செய்யப்பட்டு தேரோட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. ஜூலை 4ம் தேதி சிறிய தேர் விழாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !