கங்கையம்மனுக்கு 116வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா
ADDED :8 hours ago
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெற்கு மாடவீதி, கங்கையம்மன் கோவிலில் 116வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது.
சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெற்கு மாட வீதியில் பாஹிரதி, சாம்பவி என, அழைக்கப்படும் கங்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் கூழ்வார்த்தல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு 116வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கங்கையம்மன் வீதியுலா நடந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு கங்கையம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் குளக்கரை அருகே உள்ள பூப்பந்தலில் கங்கையம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மஹாதீப ஆராதனை நடந்தது.