உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில், நான்காம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவையொட்டி, காலை, 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து, 17 கலச அபிஷேகம் காலை, 9:00 மணிக்கு சாந்தி ஹோமம் நடந்தது. முற்பகல், 11:00 மணிக்கு தீர்த்த பிரசாதம் விநியோகம், மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !