மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம்
ADDED :1070 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் நீக்கப்பட்டு, தற்போது புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விபரங்களை அறிய maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அலுவல் சார் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தவிர கோவிலுக்கு வேறு இணையதளம் கிடையாது. பழைய இணையதளமான www.madurai meenakskhi.orgஐ அணுகும் பட்சத்தில், அது தானாக திசை மாற்றப்பட்டு, புதிய இணையதளத்திற்கு செல்லும். இதன் வழியே நன்கொடைகள், உபகோவில்களின் சேவை கட்டணங்களை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 8 நடையடைப்பு: சந்திரகிரகணத்தை முன்னிட்டு வரும் 8ல் காலை, 9:30 மணி முதல் இரவு, 7:30 மணி வரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உபகோவில்களில் நடைசாத்தப்படும்.