உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லல் நற்கனி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கல்லல் நற்கனி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கல்லல்: கல்லலில் உள்ள நற்கனி அம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இக்கோயிலில் நவ.,4 ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின. கணபதி, நவக்கிரக, லட்சுமி ேஹாமங்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பின் காலை 10:05 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து வந்து நற்கனி அம்மன் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். பரிவார தெய்வங்களான அம்பாள், கருப்பருக்கு கும்பாபிேஷகம் செய்தனர். தொடர்ந்து பட்டு சாத்துதல், மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கல்லல் கிராம நாட்டார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !