மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ கொடியேற்றம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் புகழ்பெற்ற துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கொடியேற்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புராண கால சிறப்பு மிக்க நகராகும். சமயக்குரவர்களால் பாடல்பெற்ற புகழ் பெற்ற ஆலயங்கள் மயிலாடுதுறையில் காவிரியின் இருபுறமும் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களில்ல், ஆண்டு தோறும் ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் சிறப்பு மிக்கதாகும். துலாஉற்சவத்தில் மயிலாக உருமாறி அம்மன் செய்யும் பூஜையும், காவிரி தீர்த்தவாரியும் புகழ்பெற்றதாகும். இதற்கான கொடியேற்றம் இன்று வதான்னேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. முன்னதாக, கொடி மரத்திற்கு விஷேச, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு கொடிஏற்றம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் சிவகுருநாத கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்றத்தில் ஆலய தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார், பூஜைகளை செய்து வைத்தார். திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான திருக்கல்யாணம் 13ம் தேதியும், திருத்தேரோட்டம் 15ம் தேதியும், கடைமுக தீர்த்தவாரி 16ம் தேதியும் நடைபெறுகிறது பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சகங்கள் துவங்கியுள்ள நிலையில் 16ஆம் தேதி கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆலய கண்காணிப்பாளர் அகோரம், ஐந்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.