பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக பெருவிழா
ADDED :1068 days ago
மதுரை: பழங்காநத்தம் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று காலை 9 மணிக்கு அன்னாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு சுமார் இரவு 7.30 மணிக்கு அளவில் நடை திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகளோடு லிங்கத் திருமேனியின் அன்னம் களையப்பட்டு நதியில் கரைக்கப்பட்டது.