உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை விழா

திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை விழா

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் சுப்ரமணியசாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாதாரணை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !