உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஐப்பசி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது.

காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் மலை மீது உள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில், கிருத்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாத கிருத்திகையை ஒட்டி, நேற்று, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், நடைபெற்றது. மூன்று முறை மலைக்கோவிலை வலம் வந்த உற்சவர், பின், வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப் பெருமான் சன்னதியில் கிருத்திகை விழாவை ஒட்டி, சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்ளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.


ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோவில் சன்னிதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னிதி, பேருந்து நிலையம் அருகில் உள்ள நாகவல்லியம்மன் கோவிலில் உள்ள முருகப் பெருமான் சன்னிதி உள்ளிட்ட கோவில்களில் கிருத்திகை விழாவை ஒட்டி பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !