உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயில்களில் ஐப்பசி கார்த்திகை: திருவிளக்கு பூஜை

முருகன் கோயில்களில் ஐப்பசி கார்த்திகை: திருவிளக்கு பூஜை

பழநி, ஐப்பசி மாத கார்த்திகையை யொட்டி பழநி மலை முருகன் கோயிலில் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜையும் நடந்தது. உள்ளூர், வெளியூர் என அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, தீபாராதனை , பஜன், விளக்கு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !