உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி முகூர்த்தகால் நடும் வைபவம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி முகூர்த்தகால் நடும் வைபவம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதேசிபெருவிழாவிற்கான  முகூர்த்தகால் நடும் வைபவம் இன்று (14ம் தேதி) ஆயிரங்கால் மண்டபம் அருகில் திருக்கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில்..

மார்கழி 07 -ம் தேதி (22.12 .2022)  அன்று திருநெடுந்தாண்டகமும,
மார்கழி 08-ம் தேதி  ( 23.12.2022) முதல் மார்கழி 17-ம் தேதி வரை ( 01.01.2023)  பகல் பத்து திருவிழாக்களும் ,
மார்கழி 17-ம் தேதி (01.01.2023) அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத்  திருநாளான ஸ்ரீ நம் பெருமாள் இரத்தினங்கியுடன்  பரமபத வாசல் திறப்பு
மார்கழி 18-ம் தேதி (02.01 .2023) திங்கட்கிழமை காலை  04.45 மணிக்கும்  நடைபெரும். மேலும்
மார்கழி 24-ம் தேதி  (08.01.2023) ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும் ,
மார்கழி-25 -ம் தேதி (09.01.2023) அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும்,
மார்கழி 26-ம் தேதி (10.01.2023) அன்று தீர்த்தவாரியும்,
மார்கழி-26ம் தேதி (11.01.2023) அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !