விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் திருவாதிரை வழிபாடு
ADDED :1395 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஐப்பசி திருவாதிரை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஐப்பசி திருவாதிரையை முன்னிட்டு, அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.