உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 20ம் தேதி வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

வரும் 20ம் தேதி வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

தொண்டாமுத்தூர்: ஓணாப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவிலில், வரும், 20ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.

ஓணாப்பாளையம், ராசி கார்டனில், ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும், 20ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. 18ம் தேதி, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. அன்று, காலை, 7:30 மணிக்கு, ஓணாப்பாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வருதலும், மாலை, 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜையும் நடக்கிறது. 19ம் தேதி காலை, 10:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், பகல், 3:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் நடக்கிறது. வரும், 20ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள், மகா கும்பாபிஷேக விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !