மந்தக்கரை மகா கணபதி கோவிலில் தேர் திருவிழா கொண்டாட்டம்
பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி மாந்தக்கரை மகா கணபதி கோவிலின் தேரோட்டம் விமர்சையாக நடந்தது.
திருவிழாவின் முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட தேரில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சுவாமி, கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் எழுந்தருளி உலா வந்தனர். இரண்டாம் திருநாளான இன்று மந்தகரை மகா கணபதி கோவில் தேரோட்டம், செண்டை மேளம் முழங்க காலை 11:25 மணி அளவில் நடந்தது. "மகா கணபதிக்கு ஜெய், வீர கணபதிக்கு ஜெய்" என்று கோஷத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக கோவிலில் காலை 6:00 மணிக்கு ருத்ராபிஷேகம், 9:00 மணிக்கு வேதபாராயண நிறைவு, ஆசீர்வாதம் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இன்று பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில்களில், தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக நேற்று சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் புதிதாக வெள்ளியின் தயார் செய்த ஆறரை அடி உயரமுள்ள குதிரை வாகனத்தில் உற்சவர் எழுந்தருளும் வைபவவும் நடந்தது. நாளை மாலை 6:00 மணியளவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள தேர்முட்டியில் ரதோற்சவத்தின் சிறப்பு அம்சமான ஆறு தேர்தளின் சங்கமம் நடக்கிறது. இதையடுத்து இன்று கல்பாத்தி அக்ரஹார வீதி உட்பட சுற்றுவட்டாரங்களில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு பாலக்காடு நகர டி.எஸ்.பி.,யின் தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளான. கேமரா மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளனது.