திருப்பரங்குன்றம் கோயிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்
ADDED :1053 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான தேங்காய் தொடும் முகூர்த்தம் நேற்று நடந்தது. கோயிலில் இருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம், மேளதாளத்துடன் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகம் சென்றனர். அங்கு உதவி கமிஷனர் சுரேஷ்க்கு மரியாதை செய்து, தேங்காய் பழம் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் தொட்டுக் கொடுத்தார். அவரிடம் கார்த்திகை திருவிழா விவரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டு திருவிழாவிற்கான நாட்கள் குறிக்கப்பட்டது. பின்பு கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து யாகசாலை பூஜை நடந்தது. கார்த்திகை தீப திருவிழா நவ. 28ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.