உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் கார்த்திகை மாத விழா

ஆஞ்சநேயர் கோவில் கார்த்திகை மாத விழா

மேட்டுப்பாளையம்: காரமடை அடுத்த மருதூர் ஊராட்சியில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெறும். கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை விழா நேற்று கோவிலில் நடந்தது. காலையில் நடை திறந்து சிறப்பு பூஜை செய்தனர். பிறகு ஆஞ்சநேயருக்கு தவயோக கோல அலங்காரம் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !