உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு, ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் 4 ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தனர். யாக சாலை பூஜைகளும், பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். அலங்கார ரதத்தில் அம்மன் ஊர்வலம், அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாட்டினை கோயில் சேவார்த்திகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !