உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வீக சக்தி அதிகரிக்க...

தெய்வீக சக்தி அதிகரிக்க...


விஷ்ணுவின் அம்சமாக சாளக்கிராமக்கல் இருப்பது போல வலம்புரிச் சங்கு ஐஸ்வர்ய லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் திருஷ்டி தோஷம் ஏற்படாது. பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருந்தால் தீயசக்தி நீங்குவதோடு வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமையன்று  சங்கு பூஜை செய்தால் செல்வம் பெருகும். தண்ணீரில் சங்கினைக் கழுவி சுத்தம் செய்து வாழையிலை அல்லது வெள்ளித் தட்டில் அரிசி பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும். சந்தனம் குங்குமம், மலர்களால் அலங்கரித்த பின், லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது 108 போற்றியை சொல்லி வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !