வாழ்க்கையில் முன்னேற...
வழிகாட்டுகிறார் அவ்வையார்
* அதிகாலையில் எழு. வாழ்க்கையில் முன்னேறுவாய்.
* கடவுளிடம் சரணாகதி அடைந்தால் உன்னுடைய பாவம் தீரும்.
* இன்பம், துன்பத்தை சமமாக எடுத்துக்கொள்.
* நீ செய்த பாவ, புண்ணியம் மட்டுமே உன்னுடைய சொத்து.
* காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லதை உடனே செய்.
* கடவுளின் மகிமையை கூறும் புத்தகங்களை தினமும் படி.
* இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்.
* நீ செய்து முடிக்கும் ஒவ்வொரு செயலும், உனது புண்ணியத்தால் கிடைத்தவை.
* என்னதான் நீ முயற்சிச்சித்தாலும், கிடைக்கவேண்டியதுதான் உனக்கு கிடைக்கும்.
* ‘சிவாயநம’ என சொல்வோருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை.
* நல்லவர்கள் வறுமையிலும் தனது நேர்மையை கைவிடுவதில்லை.
* உலக நடைமுறைக்கு ஏற்ப செயல்படு.
* உன்னிடம் பணம் இருந்தாலும் அதை அனுபவிக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
* உன்னுடைய துன்பத்திற்கு காரணம் நீயே.
* கல்வி மட்டுமே அழியாத செல்வம்.
* ஆசிரியரை மதிக்காதவனின் அறிவு பயன்படாது.
* யாரிடமும் வீணாக சண்டையிடாதே.
* நல்ல உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, வாய்ப்புக்காக காத்திருப்பவனே அறிவாளி.
* பிற உயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும்.
* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.