உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்யா கணபதிக்கு லட்சார்ச்சனை

வித்யா கணபதிக்கு லட்சார்ச்சனை

புதுச்சேரி: செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதிக்கு 12ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மூலமந்திரம் மற்றும் காயத்திரி ஹோமம், தீபாராதனை நடந்தது. காலை ஏழு மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. காலை 8.30 ணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. மாலை 7 மணிக்கு லட்சார்ச்சனை ஆரத்தி, மகாதீபாராதனை நடந்தன.பள்ளி தாளாளர் செல்வகணபதி, துணை முதல்வர் பத்மா, தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியைகள் தமிழ்ச்செல்வி, அங்காளபுவனேஸ்வரி, லோக்நாத் பெகரா, அருணாச்சலம், அய்யப்பன், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !