லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேர்த் திருவிழா
ADDED :4959 days ago
புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரிலுள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலின் 41வது பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தொடர்ந்து திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறை மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.பிரம்மோற்சவத்தில், ஹயக்ரீவர் ஜெயந்தி திருத்தேர் நேற்று நடந்தது. மாட வீதிகள் வழியாக வந்த திருத்தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.