உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப‌ திருவிழா

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப‌ திருவிழா

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது. நேற்று காலை திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. மாலை தீப கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. சன்னதி வீதியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தென்னம்பட்டி சவடம்மன் என பல கோயில்களிலும் கார்த்திகை தீப விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !