மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1035 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று மதியம் ஒரு மணி உச்சி கால பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் மூன்று வகை தீபாராதனை காட்டப்பட்டது. உச்சி கால பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.