உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோத்சவ விழா கொடியேற்றம்

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோத்சவ விழா கொடியேற்றம்

தென்காசி: அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகோத்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது கோவில் தங்க கொடிமரத்திற்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜையினை கோவில் மேல்சாந்தி ராஜேஸ் நம்பூதிரி, தந்திரி கண்டரரு மோகனரு நடத்தினர். மேளதாளம் முழங்க தங்க கொடி மரத்தில் கொடிப் பட்டம் ஏற்றப்பட்டது. அப்போது திரளான ஐயப்ப பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பினர். பின்னர் சுவாமிக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்வில் தமிழகம், கேரள பக்தர்கள் பங்கேற்றனர். விழா பத்து நாட்கள் நடக்கிறது. 5ம் நாள் வரையிலும் உற்சவபலிபூஜை, 7, 8 ம் நாட்களில் கருப்பன் துள்ளல், 9ம் திருவிழாவான 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. டிச.26ம் தேதி ஆராட்டு விழாவும் 27ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !