வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை எண்ணிக்கை
ADDED :1354 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை இன்று கோயில் அதிகாரி அதிகாரி வெங்கடேசு மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி முன்னிலையில் கணக்கெடுப்பு பணியில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் பணமாக ஒரு கோடியே 19 லட்சத்து 25 ஆயிரத்து 905 ரூபாய்; தங்கம் 42 கிராம் ,; வெள்ளி 2 கிலோ 100 கிராம்; வெளிநாட்டு பணம் 1,100/கரென்சி; வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்க தெரிவிக்கப்பட்டது.