ஐயப்பன் கோயிலில் பஜனை விழா
ADDED :1101 days ago
மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் நம்பி நாகம்மாள் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்த உடன் வாரந்தோறும் 3 நாட்கள் பஜனை விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறப்பு பஜனையை ஒட்டி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பஜனை பாடல்களை பாடி ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி ரவி செய்திருந்தார்.