உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

ஈரோடு : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் கருடஸ்தம்ப ஸ்ரீஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை.பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி திருக்கோவில் வளாகத்திலுள்ள கருடஸ்தம்பஸ்ரீஆஞ்சநேயர் கோவிலில் காலை 5மணிமுதலே நடை திறக்கப்பட்டது.அலங்காரம்,125லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்பு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !