ஐயப்ப பக்தர்கள் நெய்க்குடம் பாதையாத்திரை
ADDED :1021 days ago
ரெகுநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் ஆபீஸ் அருகே உள்ள மல்லம்மாள் கோயிலில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு பாதயாத்திரையாக 14 கி.மீ., ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். காலை 10:00 மணிக்கு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலுக்கு நெய் நிரப்பப்பட்ட குடத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். கரகாட்டம் முன்னே செல்ல சரணகோஷம் முழங்கியவாறு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். வல்லபை ஐயப்பன் கோயில் குருசாமி மோகன்சாமி தலைமை வகித்தார். ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயில் வந்தடைந்தவுடன் கூட்டு வழிபாடு, பஜனை, அன்னதானம் உள்ளிட்டவைகள் நடந்தது.