பிரதரமர் தாய் மீராபென் மறைவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம்
சிதம்பரம்: இந்திய பிரதமர் மோடியின் தாய் மறைவிற்கு சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரத்திலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது..
இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று அதிகாலை இறந்தார். அதனையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மற்றும் பா.ஜ. , வினர் சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்வில் பா ஜ. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியன், விவசாய அணி ரகுபதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலின் கிழக்கு, தெற்கு, வடக்கு. மேற்கு என நான்கு கோபுரங்கள் உள்ளன. யாரேனும் இறந்தால், கோவிலின் தெற்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கம். முக்கியமானவர்கள் யாரேனும் இறந்தால் நான்கு கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்படும். அதன் அடிப்பயிைல் நேற்று நடராஜர் கோவிலின் நான்கு கோபுரத்திலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல் மறைந்த முதல்வர் கருனாநிதி இறந்தபோதும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.