உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., கோயில் விமானத்தில் தங்க தகடு: பணி துவக்கம்!

ஸ்ரீவி., கோயில் விமானத்தில் தங்க தகடு: பணி துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விமானத்தில், தங்க தகடு பதிக்கும் பணி, சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. கோயில் விமானத்தில் தங்க தகடு பதிக்கும் பணிக்காக, ஏற்கனவே இருந்த விமானம் இடிக்கப்பட்டு, புதிய விமானம் கட்டும் பணி, 2010ல் துவங்கி, தற்போது நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, செப்பு தகடு பொருத்தப்பட்டது. இதன் மீது தங்க தகடு பதிக்கும் பணி நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விமானத்தின் ஒரு பகுதியாக, வராக சுவாமிக்கு தங்க தகடு பதிக்கும் பணியை, திருமலை திருப்பதி சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தார். இந்து அறநிலையத்துறை ஆலோசகர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, இணை ஆணையர் தனபால், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தக்கார் ரவிச்சந்திரன் ,""விமான தங்க தகடு பதிக்கும் பணிக்காக, 25 கோடி ரூபாய் செலவில்,70 கிலோ தங்கம் பயன்படுத்தப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !