சுப்பிரமணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1025 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில் மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி கார்த்திகையை முன்னிட்டு மூலவர்களான வள்ளி, தெய்வானை சுப்பிரமணியருக்கு பன்னீர், பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. நன்னாரி மாலை, ஆரஞ்சு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.