உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி உற்சவ விழா இன்று துவக்கம்

மார்கழி உற்சவ விழா இன்று துவக்கம்

பல்லடம்: சத்ய சாய் சேவா சமிதி சார்பில், மார்கழி உற்சவ விழா, பல்லடத்தில் இன்று துவங்குகிறது.

பல்லடம் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி, மற்றும் தமிழ் சங்கம் சார்பில், ஆண்டு தோறும் மார்கழி உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டாக மார்கழி உற்சவ விழா கொண்டாடப்படவில்லை. நடப்பு ஆண்டு மார்கழி விழா, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் இன்று துவங்குகிறது. இன்று முதல் ஜன., 13 வரை, தினசரி மாலை, 6.00 மணிக்கு நடக்கவுள்ள இந்த விழாவில், சத்ய சாய் சேவா சமிதியின் பஜனைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், கும்மியாட்டம், பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று ஆன்மிக உரை நிகழ்த்த உள்ளனர். விழா நினைவாக, தினசரி பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளதாக, சத்ய சாய் சேவா சமிதியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !