திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சங்கராந்தி விழா
ADDED :1012 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சங்கராந்தி விழா நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் சங்கராந்தியை முன்னிட்டு மாலையில் பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி, தாயார் தென்னமரத்து வீதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தாயார் சன்னதி எழுந்தருளி சாயரட்ச பூஜைகள் நடந்தன. பின்னர் கிராமத்தினர் மஞ்சக்கொத்து சாத்தினர். பின்னர் பெருமாள், தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர்.