பாலசுப்பிரமணியர் கோயிலில் மாட்டுப்பொங்கல் கோமாதா பூஜை பஜனையுடன் நிறைவு
ADDED :1068 days ago
பெரியகுளம்: வடுகபட்டியில் பாலசுப்பிரமணியர் கோயில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாபூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலில், மார்கழி1ம் தேதி முதல், தை 2ம் நாள் மாட்டுப் பொங்கல் வரை தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பாலசுப்பிரமணியர் கோயிலில் துவங்கி வடுகப்பட்டியில் தெருக்களின் வழியாக பாலசுப்பிரமணியர் பக்தி பாடல்களை பாடி வருவர். 125 ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்த பஜனை குழு நடந்து வருகிறது. இன்று மாட்டுபொங்கலை முன்னிட்டு கோமாதா பூஜையுடன் துவங்கிய பஜனை, மாட்டின் கொம்புகளுக்கு பூச்சூடி, பொட்டிட்டு பஜனை குழுவில் அழைத்து வந்தனர். சிறுவர்கள் இளைஞர்கள் கையில் கரும்புடன் பங்கேற்றனர். பொங்கல் வழங்கப்பட்டது.