கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :1063 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், தை மாதம் 5ம் நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
இதனையொட்டி, கோவிந்தராஜ பெருமாள், தாயார் உற்சவ மூர்த்திகள் நேற்று காலை கோமுகி நதிக்கு சென்றனர். தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார்.