உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பந்தல்கால் வைபவம்

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பந்தல்கால் வைபவம்

தென்காசி: ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் பந்தல்கால் நாட்டு வைபவம் நடந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தமுடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான பந்தல்கால் நாட்டு வைபவம் நேற்று நடந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டதிருக்கோயில்கள் நிர்வாகபணியாளர்கள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும் 29ம் தேதி மாலை 3.30 மணிக்கு தீர்த்தஸங்க்ரஹணம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அனுக்ஞை, தனபூஜை, வாஸ்து சாந்தி நடக்கிறது. 30ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. 5.30 மணிக்கு யாகசாலை பிரவேசம், கோபூஜை நடக்கிறது. 8.30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 31ம் தேதி காலை 8.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி அதிகாலை3.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலைபூஜை நடக்கிறது. 6 மணிக்கு கும்­பங்கள்எழுந்தருளல் நடக்கிறது. 6.40 மணிக்கு பாலசுப்பிரமணிய சுவாமி, முத்துக்குமார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை9 மணிக்கு மகாஅபிஷேகம், 10.30 மணிக்கு மகாதீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா  நடக்கிறது.
ஏற்பாடுகளை சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் ஞானசேகர், நெல்லை இந்து சமய அறநிலையத்துறைஇணைஆணையர் கவிதாபிரியதர்ஷினி, கோயில் பணியாளர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !