உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் சுவாமிக்கு பண மாலை சாற்றி நேர்த்திக்கடன்

சீனிவாச பெருமாள் சுவாமிக்கு பண மாலை சாற்றி நேர்த்திக்கடன்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் பழமைவாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி, தல வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீனிவாசப் பெருமாள் வீதியுலா நடந்தது. விழாவில், பெரியசெவலை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், வீதியுலா வந்த சுவாமிக்கு, பண மாலை, வடை மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும், பக்தர்கள் சிலர் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, வேர்க்கடலை, கத்திரிக்காய், வெண்டைக்காய், உள்ளிட்ட காய்கறிகளை சூறைவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !