பழநி கும்பாபிஷேகம் : பாரவேல் மண்டபத்தில் பூர்வாங்க பூஜை
ADDED :1063 days ago
பழநி: பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிக்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பழநி, மலைக்கோயில் படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26,27,லும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் ஜன.18ல் துவங்கின. நேற்று தங்க சப்பரத்தில் கலசங்கள் வைக்கப்பட்டு, எட்டு திசைகளுக்கும் பூஜைகள் நடந்தது. தமிழ் ஓதுவார்கள் வேத விற்பனர்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் ஓதினர். இன்று (ஜன.20.,) காலை 9:00 மணி மாலை 6:00 மணிக்கு பூஜைகள் நடைபெற உள்ளன. இது நவகிரக பூஜைகள் நடைபெற உள்ளன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.