உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை அடைப்பு: பிப்., 12ல் மீண்டும் திறப்பு: பந்தளம் புறப்பட்டது திருவாபரணம்

சபரிமலை நடை அடைப்பு: பிப்., 12ல் மீண்டும் திறப்பு: பந்தளம் புறப்பட்டது திருவாபரணம்

சபரிமலை,  மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. தொடர்ந்து திருவாபரணங்கள் பந்தளம் புறப்பட்டது. சபரிமலையில் கடந்த டிச., 27–ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மகரவிளக்கு கால பூஜைகள் டிச., 30–ம் தேதி தொடங்கியது. 14–ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. 15–ம் தேதி முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெற்றது. 18–ம் தேதி காலை 11:00 மணிக்கு நெய்யபிேஷகம் நிறைவு பெற்றது. 19–ம் தேதி இரவு 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் கணபதிேஹாமம் நடைபெற்றது. பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு மூடப்பட்டு யோக நிலையில் அமர்த்தப்பட்ட பின்னர் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை அடைத்தார். பின்னர் கோயில் சாவியை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்பட்டது. வழக்கமாக பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் சாவி ஒப்படைக்கும் சடங்கு நடைபெறுவது வழக்கம். பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மரணம் காணமாக அங்கிருந்து யாரும் சபரிமலை வராததால் அவர்கள் இல்லாமல் சடங்குகள் நடைபெற்றது. இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்., 12–ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !