காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை; மூலவருக்கு திருமஞ்சனம்
ADDED :140 days ago
மேட்டுப்பாளையம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதன் பின் தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. கால சந்தி பூஜை, அஷ்டோத்திர நாமாவளி, சாற்று முறை, மங்கள ஆரத்திக்கு பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர் குழுவினர், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.