உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி வைபவம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி வைபவம்

திருக்கோவிலூர்: தை அமாவாசையை முன்னிட்டு திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் தென்பெண்ணை ஆற்றில் சக்திக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர்,  வீரட்டானேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி வைபவம் நடந்தது. காலை 10:30 மணிக்கு சக்தி, மேலதாளம் முழங்க புறப்பாடாகி தென்பெண்ணையாற்றில் அனுக்ஞை,  விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், வேத மந்திரங்கள் முழங்க சக்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தென்பெண்ணையில் மூழ்கி தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. இதில்  பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !