உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பூஜையில் கோ, பரி, கஜ பூஜை

பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பூஜையில் கோ, பரி, கஜ பூஜை

பழநி: பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேக பூஜையில் திருஆவினன்குடி கோயிலில் கஜ பூஜை, பரி பூஜை, கோ பூஜை நடந்தது.

பழநி, மலைக்கோயில், படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26,27,லும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூஜைகள் ஜன.18ல் துவங்கின. நேற்று திரு ஆவினன்குடியில் இரண்டு  யானைகள், ஏழு குதிரைகள், 10 கன்றுடன் சேர்ந்த பசு மாடுகள் வைத்து பூஜை நடைபெற்றது. முன்னதாக தமிழ் ஓதுவார்கள், அர்ச்சகர்கள் கலசம் வைத்து மந்திரங்கள் வாசித்தனர். இன்று (ஜன.22.,) காலை  9:00 மணி திருமுருகப் பெருமான் வழிபாடு, ஆறு வகை பொருட்கள் சிறப்பு வேள்வி நடைபெறும். அர்ச்சக ஸ்தானிகர்கள், பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோயில்  வருவர். மாலை 6:00 மணிக்கு அரச மர வழிபாடு, நிலமகள், பூமி பூஜை, புனித மண் எடுத்து ஆலயம் வருதல், ஏழு கடல், நெல்மணி நிறைகுட வழிபாடு நடைபெறும். கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !