பழநி கோயில் கும்பாபிஷேக வேள்வியில் அர்ச்சர்களுக்கு வஸ்திரம்
ADDED :1063 days ago
பழநி: பழநி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களுக்கு அவர்களுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது.
பழநி கோயில் கும்பாபிஷேகம் யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள், வேத ஓதுவார்கள், கட்டியம் குருக்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர் இதில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் கலந்து கொள்ளும் குருக்கள் சிவாச்சாரியார்கள் ஓதுவார்கள் ஆகியோருக்கு வஸ்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கந்த விலாஸ் செல்வகுமார், நவீன் விஷ்ணு, நரேஷ் குமார் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் இணை ஆணையர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.