/
கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை ரத சப்தமி : 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை ரத சப்தமி : 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா
ADDED :996 days ago
செஞ்சி: பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா நடக்க உள்ளது. செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் நாளை (28 ம் தேதி) ரதசப்தமி விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு ஒரே நாளில் ரங்கநாதர் 7 வாகனங்களில் மாடவீதிகள் வழியாக வீதி உலா நடக்க உள்ளது. காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8 மணிக்கு சேஷவாகனத்திலும், 10 மணிக்கு கருடவாகனத்திலும், 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்திலும், 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.