உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழா நடைபெறும். இந்த ஆண்டு, தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா, கடந்த டிச., 23ம் தேதி துவங்கி,  நேற்று முன்தினம் வரை நடந்தது.

இதைத் தொடர்ந்து, சிறப்பு வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். தைப்பூச ஜோதி விழாவையொட்டி, நேற்று  அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சித்தர் பீட வளாகத்தில், தைப்பூச ஜோதி ஊர்வலத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்  தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதிபதி ராஜேஸ்வரன், உயர்நீதிமன்ற அட்வகேட் ஜென்ரல் பி.குமரேசன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். விழா  ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் சக்தி பீடங்கள், மாவட்ட நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !