குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்
ADDED :1038 days ago
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நடந்தது. குற்றாலம், குழல்வாய் மொழி அம்பாள் சமேத குற்றாலநாத சுவாமி கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சி முருகன், வள்ளி, தெய்வானை மேளதாளங்கள் முழங்க சித்திர சபைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பக் குளத்தில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வக்கீல் கார்த்திக்குமார், தென்காசி ஒன்றிய தி.மு.க., செயலாளர் அழகு சுந்தரம், கண்ணன், பா.ஜ., திருமுருகன், துார்பாண்டி, பிலவேந்திரன், ராமையா, தி சிப்ஸ் முருகன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.